Pages

Sunday, February 10, 2013

வீர நெருப்பு அநீதிகளை பொசுக்கட்டும். மரணத்தை பஞ்சு மெத்தையாக்கட்டும்.



     கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அது நமக்கு தெரியாமல் போகலாம். ஆனால் இயற்கை என்ற ஒரு சக்தியின் கருணையை நிச்சயம் நாம் உணர்ந்தாக வேண்டும்.

     உண்மையில் இயற்கை மிகவும் கருணை கொண்டது. நம் உடலை விட்டு உயிர் பிரிந்த சில மணி நேரத்தில் நம் உடல் அழிய தொடங்கிவிடுகிறது. ஆனால் நாம் உயிருடன் இருக்கும் பொழுது இயற்கை நம் உடலை அழியாமல் பாதுகாப்பது மட்டும் அல்லாமல், உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை தானாக சரிசெய்துகொள்ளும் எண்ணற்ற தந்திரங்களையும் இயற்கை நம் உடலுக்கு தந்துள்ளது.

     இயற்கை நமக்கு வலி என்ற உணர்ச்சியை உருவாக்கி வைத்திருப்பது நம்மை தண்டிப்பதர்க்காக அல்ல. புறக்காரணி ஒன்று நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை நம் அறிவுக்கு தெரியும் முன்பாகவே இயற்கை நம் உடலை பாதிப்பிலிருந்து அனிச்சை செயலாக விடுவித்துக்கொள்ளும் தந்திரம் தான் வலி. வலி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம் உடல் உறுப்புகள் பலவற்றை நாம் எப்பொழுதோ இழந்திருப்போம். பாதங்கள் கல்லிலும் முள்ளிலும் கிழிக்கப்படும் பொழுதும் நாம் அவைகளை கண்டுகொள்ளாமல் இருந்து அவைகள் சிதைந்திருக்கும்..

    ஆனால் அதே இயற்கை ஒரு போர்வீரன் போர் களத்தில் ஆக்ரோசமான வீரத்துடன் போர் புரிந்து கொண்டிருக்கும் பொழுது தன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட அதன் வலியை உடனே அவனுக்கு தெரிவிக்காது. போர்வீரன் சாந்தமடைந்து, ஆசுவாசம் அடைந்த பிறகே அவனுக்கு தன் உடலை கவனிக்குமாறு தெரிவிக்கும். போர் முனையில் போர் வீரர்கள்  குண்டு வெடித்து உடல் சிதறி இறக்கும் பொழுது அவர்களால் வலி என்பதை சிறிதும் உணராமலேயே இறந்திருப்பர்.இது ஒரு அறிவியல் உண்மையே.

    நம் தோலில் சிறு அரிப்பு ஏற்பட்டால் உண்டாகும் துன்பத்தை கூட நமக்கு தர விரும்பாமல் நகத்தை படைத்த இயற்கை அன்னையா நமக்கு மரணத்தின் பொழுது துன்பத்தை தருவாள்?

      ஆனால், பிரச்சினைகளை எதிர்கொள்ள துணியாத சாந்தமான கோழைகள் உடலில் சிறு கீறல் இல்லை என்றாலும் பிரச்சினைகளை கண்டு அஞ்சி அஞ்சி நடுங்கியே சாவர்.



    மரணம் என்பது மாவீரர்களுக்கு பஞ்சுமெத்தை என்பது உண்மையே. ஆனால் கோழைகளுக்கு அது ஒரு நரக குழி.


    இந்த உலகத்தில் பிறந்த ஜீவராசிகள் அனைத்திற்கும் மரணத்திற்கான தேதியும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில் உனக்கான மரணத்தை பஞ்சு மெத்தையாக மாற்றப் போகிறாயா? அல்லது நரக குழியாகவே வைத்திருக்க போகிறாயா?

   அநீதியை எதிர்க்கும் வீரத்தை உனக்குள் இருந்து வெப்பமென வெளியில் எடுத்து சுட்டெரிக்கும் சூரியனாக மாறப் போகிறாயா? அல்லது கோழையாக படு பாதாள நரக குழிக்குள் ஆழ்ந்த கோமாவில் மறைய போகிறாயா?

No comments:

Post a Comment